அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய இந்திய அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுப்மான் கில் மற்றும் விராட் கோலியின் சதத்துடன் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்  மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி லீட் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 5வது மற்றும் கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களை விரைவாக ஆட்டமிழக்க அனைத்து வியூகங்களையும் பயன்படுத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அசுரனாக மாறிய வில்லியம்சன்! WTC இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா!


ஆனால், குனமென் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மட்டுமே ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை அக்சர் படேல் எடுத்தார். ரவிசந்திரன் அஸ்வின் குனமென் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பிறகு எந்த விக்கெட்டும் விழவில்லை. லபுசேன் நங்கூரம்போல் நிலைத்து நின்று கொண்டார். அவர் 213 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களுடன் இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 175 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டிக்ளோர் செய்தது. 



ஆனால் சொற்ப ஓவர்கள் மட்டுமே இருந்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தாலும் அது சாதமானதாக இருக்காது என்பதை உணர்ந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டிராவில் முடித்துக் கொள்ள சம்மதித்தார். கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது போட்டி டிராவில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வென்றிருந்ததால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக 4வது முறையாக இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. 



ஜூன் 6 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் சந்தித்துக் கொள்ள இருக்கின்றன. கடைசியா 2003 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி இருந்தன.


மேலும் படிக்க | WPL 2023: இக்கட்டான நிலையில் RCB பெண்கள் அணி! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ