இந்திய கிரிக்கெட் அணியின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு சேர்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தான், உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி தொடர் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
 
இன்னும் சில நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்ற கேள்வி எழும்பியது. இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) வாக்கெடுப்பு நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக, 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்கள் பட்டியலிடப்பட்டு அதில் சிறந்த தொடரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டித் தொடரும் இடம் பிடித்தன.


Also Read | நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹர்பஜன்சிங்.. காரணம் என்ன தெரியுமா..!!


இதில், இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம் ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரை இறுதிக்கு முன்னேறின. அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) போட்டித்தொடர்கள் போட்டியிட்டன.



சிறந்த டெஸ்ட் தொடரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆர்வமுடன் வாக்குகளை பதிவிட்டனர். இறுதியில் வென்றது 2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரம் பெற்றது. இது, ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.


Also Read | Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR