ICC T20 World cup - IND vs NED : இந்தியா பேட்டிங்; சதம் அடிப்பாரா விராட் கோலி?
ICC T20 World cup - IND vs NED : டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ICC T20 World cup - IND vs NED : ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் இன்று 2 போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதன்மூலம், இரண்டாவது பிரிவு புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க வீரர் ரூசோ இந்த உலகக்கோப்பையில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகள் தங்களின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிட்னியில் தற்போது, மழை பெய்யும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?
பிளேயிங் XI
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது (அ) ரோலோஃப் வான் டெர் மெர்வ், ஃபிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ