ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த அணியில் இடம் பிடித்திட பல வீரர்கள் போராடி வருகின்றனர். ஒருசிலரின் இடங்கள் மட்டுமே உறுதிசெய்யப்பட்டு உள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் யார் யார் இடம் பெற போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து உள்ளனர்.  இதனால் உலக கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுப்பதில் இந்தியத் தேர்வாளர்களுக்கு கடினமான சூழலாக உள்ளது.  ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் போன்ற நட்சத்திரங்களைத் தவிர கடந்த ஒரு வருடத்தில் சர்வதேச அளவில் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்... வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!


அவர்களில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் தோனிக்கு பிறகு கடைசி நேரத்தில் போட்டியை முடிந்து கொடுக்கும் திறனை நிரூபித்துள்ளார்.  நிதானமாக இருந்து கடைசி வரை போட்டியை கொண்டு சென்று வெற்றிபெற செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் ரிங்கு சிங் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல், ரிங்கு சிங்கை விளையாடும் லெவன் அணியில் எடுக்க இந்தியா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தற்போது விராட் கோலி இந்திய அணியில் 3வது இடத்தில் களமிறங்குகிறார். 


“விராட் கோலி டி20 உலக கோப்பையில் 100 சதவீதம் ஓப்பன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் மூன்றாவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அவர் அவ்வாறு செய்தால், ரின்கு சிங் அணியில் விளையாட வாய்ப்பு இல்லாமல் போகலாம். இந்தியாவின் லெவன் அணியில் ரிங்கு கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே, விராட் கோலி ஓப்பனிங் வீரராக களமிறங்க வேண்டும்” என்று சைமன் டவுல் கூறியுள்ளார். இந்திய அணி கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடி டி20 போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் ரோஹித்துடன் இணைந்து ஓப்பனிங் செய்தார். விராட் கொலை 3வது இடத்தில் களமிறங்கினார்.


“இந்திய அணியில் விராட் கோலி எப்போது களமிறங்க வேண்டும் என்பதை பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும். தற்போது ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார். ஆனால் என்னுடைய நிலைப்பாடு விராட் கோலி களமிறங்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகின் தலை சிறந்த பேட்டர். அவர் வேகப்பந்து வீச்சாளர்களை அசால்டாக கையாள்வார். அவர் பந்தை அழகாக அடிப்பார். சுழலுக்கு எதிராக வந்து தொடங்குவது அவரது சிறந்த விருப்பம்" என்று மேலும் கூறினார்.  அதே சமயம், சைமன் டவுல் இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியனை குறிப்பிடவில்லை. "ஓப்பனிங் வீரர்கள் அவுட் ஆனா பிறகு 3வது இடத்தில் சஞ்சு சாம்சன், 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5வது இடத்தில் சிவம் துபே, 6வது இடத்தில் ரிங்கு சிங், 7வது இடத்தில் ரவிந்திரா ஜடேஜா ஆகியோரை களமிறக்க வேண்டும்" என்று கூறினார். 


மேலும் படிக்க | MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ