ICC டெஸ்ட் போட்டி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் விராட் கோலி
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்; சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே பேட்ஸ்மேன்களின் முதல் -10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்; சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே பேட்ஸ்மேன்களின் முதல் -10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் (ICC Test Rankings 2020) பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில் முறையே எட்டாவது இடத்தில் பும்ரா 779 புள்ளிகளுடம் இருக்கிறார். மூத்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் - 756 புள்ளிகள் பெற்று 10வது இடத்தில் இருக்கிறார்.
பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli) இரண்டாவது இடத்தைப் பிடித்தார், இதில் முறையே ஏழாவது மற்றும் 10 வது இடங்களில் செஸ்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith)- 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை அடுத்து 886 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
766 புள்ளிகளுடன் பூஜாரா ஏழாவது இடத்தில் உள்ளார், பென் ஸ்டோக்ஸ் - 760 புள்ளிகள், ஜோ ரூட் - 738 புள்ளிகள், இந்தியா டெஸ்ட் துணை கேப்டன் ரஹானே - 726 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலின் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah)- 779 புள்ளிகள். மற்றும் மூத்த ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ashwin) - 756 புள்ளிகளுடன் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முறையே எட்டாவது மற்றும் 10 வது இடங்களைப் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (904). அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் நியூசிலாந்தின் நீல் வாக்னர் ஆகியோர் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைக்கான முதல் 10 இடங்களில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் அஸ்வின் ஆகிய இரு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். 397 புள்ளிகளுடன் ஜடேஜா மூன்றாவது இடத்தில் உள்ளார், அஸ்வின் 281 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சமீபத்திய 2-0 தொடர் வெற்றியைத் தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்தை (New Zealand) விட இரண்டு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ள இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா (Australia) பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
Also Read | Instagram செல்வாக்கு பட்டியலில் 25வது இடம் விராட் கோலி, மனைவி அனுஷ்கா 24 வது இடத்தில்...
அடிலெய்டில் வியாழக்கிழமை தொடங்கி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இந்தியா தரவரிசையில் ஏறுமுகத்தில் செல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
zeenews.india.com/tamil/topics/