டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வின் - ஜடேஜா முதலிடம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அஷ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஷ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இடம்பிடித்துள்ளார்கள். இந்த சாதனையை எட்டிய வீரர் என்ற பெருமை அஷ்வின் மற்றும் ஜடேஜா பெறுவார். 


பேட்டிங்கில் விராட் கோலி மூன்றாம் இடத்துக்கு பிந்தங்கி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். 


அதேபோல ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஷ்வின் இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார். வங்கதேசத்தின் சகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.