மகளிர் உலக கோப்பை: பைனலில் இந்தியா போராடி தோல்வி
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து.
கடந்த மாதம் 24-ம் தேதி இங்கிலாந்தில் 11வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் தேர்ச்சி ஆனார்கள்.
இந்நிலையில் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று சந்தித்தன.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. ஜெனி குன் (25 ரன்), லாரா மார்ஷ் (14 ரன்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும், ராஜேஷ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 229 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு இந்த முறையும் திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றியை 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சிரப்சோலே 46 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.