உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய உலகக்கோபை லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் பர்ஸ்டோவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பர்ஸ்டோவ் 51 ரன்களில் ஆட்டம் இழக்க பின்னர் வந்த ரூட்டுடன் இணைந்து தனது சதத்தை நிறைவு செய்த்தார் ஜேசன் ராய். ஜேசன் ராயின் பொறுப்பன ஆட்டத்தாலும் பின்னர் வந்த வீர்ர்களின் நிதானமான ஆட்டத்தின் மூலம் 386 ரன்னை தொட்டது. அணியின் அதிக பட்சமாக ஜேசன் ராய் 153 ரன்களும் பட்லர் 64 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முகம்மது,மெஹீடி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  


387 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. aணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமீம் இக்பால்,சவுமிய சர்க்கார் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் வந்த ஷகிப் அல் ஹாசன் 121 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார் அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அணி 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுக’லிஅயும் இழந்து 280 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.