உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு நிதானமாக ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டனர். 


இதையடுத்து, 49 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 


எனினும், சாய் ஹோப், ஹோல்டர் ஆகியோர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். எனினும், அந்த அணியால், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.