சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் சனிக்கிழமை வங்கதேச அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது!


இந்த சீசனில் தனது நான்காவது நேரான டெஸ்ட் வெற்றியை உள்நாட்டில் பதிவு செய்வதன் மூலம், இந்தியா 300 புள்ளிகளை எட்டியுள்ளது. 
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் தலா 120 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 300 புள்ளிகளை எட்டியுள்ளது.


இந்தியாவை தொடர்ந்து 240 புள்ளிகள் பின்னடைவுடன் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டாம் இடத்தில் (60 புள்ளிகளுடன்) உள்ளன.


(புள்ளி கணக்கீடு - ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் என்ற கணக்கில் போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 60 புள்ளிகள் சேர்க்கப்படும். 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் 24 புள்ளிகள் சேர்க்கப்படும்)


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை அடுத்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தலா 56 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-ஆம் இடத்தில் உள்ளன. மேலும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா தங்கள் தொடக்கத் தொடரில் எந்த புள்ளிகளையும் பெறத் தவறிய நிலையில் 0 புள்ளிக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளன.


முழுமையான புள்ளிகள் அட்டவணை இங்கே:


1 India 6 6 0 0 0 0 300
2 New Zealand 2 1 1 0 0 0 60
3 Sri Lanka 2 1 1 0 0 0 60
4 Australia 5 2 2 0 1 0 56
5 England 5 2 2 0 1 0 56
6 West Indies 2 0 2 0 0 0 0
7 South Africa 3 0 3 0 0 0 0
8 Bangladesh 1 0 1 0 0 0 0
9 Pakistan 0 0 0 - 0 0 0

பாகிஸ்தான் இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வியாழக்கிழமை பிரிஸ்பேனில் தொடங்குகிறது, இரண்டாவது டெஸ்ட், பகல்-இரவு போட்டியாக, அடிலெய்டில் நவம்பர் 29 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் பாகிஸ்தான் புள்ளிகளை குவிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், நவம்பர் 22-ஆம் தேதி ஈடன் கார்டனில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா தங்கள் முன்னிலை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் 2021 ஜூன் மாதம் யுனைடெட் கிங்டமில் இறுதிப் போட்டியில் விளையாடும், வெற்றியாளர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்களாக முடிசூட்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.