மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிசுற்று முன்னேறிய இந்திய அணி!!
நேற்று நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றது.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனதால், 42 ஓவராக குறைக்கப்பட்டது.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கவுர் 115 பந்துகளில் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 171 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசி வரை இருந்தார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 41-வது ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.
பைனலில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி