Madrid Spain Masters: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்குடன் இறுதிப் போட்டியில் மோதிய பிவி சிந்து, வெறும் 28 நிமிடங்களில்  தோல்வியடைந்தார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 இறுதிப் போட்டியில், தன்னைவிட தரவரிசைப் பட்டியலில் கீழ் இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கிடம் தோற்றது இந்தியாவுக்கு ஏமாற்றம் அளித்தது.


சிந்து சூப்பர் 300 போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 8-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.



சனிக்கிழமை நடந்த அரையிறுதியில் 23 வயதான கரோலினா மரினை தோற்கடித்தார் கிரிகோரியா மரிஸ்கா துஞக். பேட்மிண்டன் போட்டிகளில், ரியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் கரோலினா மரின் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி... உலகக்கோப்பைக்கு ரெடியா மக்களே!


உலகின் நம்பர் 12 வது இடம் மாட்ரிட்டில் அபாரமான முன்னேற்றத்தைக் கண்டார். முதலில், கிரிகோரியா 10-21, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் பின்தங்கிய உள்ளூர் வீரரை தோற்கடித்தார்.


முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனான கிரிகோரியா மரிஸ்கா, கடந்த மாதம் நடந்த சுவிஸ் ஓபனில் அரையிறுதியிலும், இங்கிலாந்து ஓபனில் கால் இறுதியிலும் அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். பெண்கள் ஒற்றையர் சுற்றுப் போட்டியில் மிகவும் மேம்பட்ட வீராங்கனைகளில் ஒருவரான இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம் ஷட்லர், தற்போது உலக பேட்மிண்டன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.


அரையிறுதியில் யோ ஜியா மின்னை வென்ற இந்திய ஷட்லர் பி.வி.சிந்துவின் அதிர்ச்சிகரமான தோல்வி இது. 7-0 என்ற சாதனையை அரையிறுதியில் நிகழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிந்து, இறுதிப் போட்டியில் இந்தோனேசிய நட்சத்திரதிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


மேலும் படிக்க | நான் HIV பரிசோதனைக்கு சென்றேன்! உண்மையை வெளிப்படுத்திய ஷிகர் தவான்!


2023 இல் தனது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடி வருகிறார் பிவி சிந்து. மன அழுத்த சிக்கலில் இருந்து திரும்பிய பிறகு, சிந்து மூன்று தொடர்ச்சியான போட்டிகளில், முதல் சுற்றில் தோல்வியடைந்தார், இதில் ஆல்- இங்கிலாந்து ஓபன்.


சிந்து கடந்த மாதம் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வெளியேறினார். ஆனால், மே மாதம் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தகுதித் தேர்வுக்கு முன்னதாக இந்திய ஷட்லர் பிவி சிந்து தனது ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்..


மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸில் சிந்துவைத் தவிர இந்திய ஷட்டில்லர்கள் பலரும் அதிர்ச்சி தோல்விகளை எதிர்கொண்டனர். கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் வெளியேறினார். அதேபோல, இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி உட்பட மற்ற நட்சத்திரங்கள் முன்கூட்டியே வெளியேறினர்.


மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மற்றொரு சோகம்... மேகக்கூட்டங்களுடன் வருகிறாரா வருணபகவான்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ