Australia vs India Brisbane Test Match: அடிலெய்ட் திகில் முதல் சிட்னி நிதானமான ஆட்டம் வரை, இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரு மறக்கமுடியாத சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விராட் கோலி, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை (India tour of Australia, 2020-21) வெற்றிகரமாக முடிக்க இந்திய வீரர்கள் போராடுகிறார்கள். நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக பல்வேறு வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (Australia vs India) இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் (Brisbane) துவங்கி நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. இன்றைய முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் மார்னஸ் லாபுசாக்னே (Marnus Labuschagne) சதம் அடித்தார். அவர் 204 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து தமிழக வீரர் நடராஜனிடம் வீழ்ந்தார்.


ALSO READ | டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை


இந்த போட்டியின் மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கி தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டை எடுத்துள்ளார்.


ஆஸ்திரேலிய (Australia) அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் T-20 போட்டிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தர். பல இந்திய வீரர்கள் காயமுற்றுள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் டி. நடராஜனுக்கு தற்போது விளையாட அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டி. நடராஜன் (T.Natarajan) படைத்துள்ளார்.


இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இருன்றி டிரா ஆனது. ஆகையால் இந்த தொடரின் முடிவை இந்த நான்காவது டெஸ்ட் போட்டியே முடிவு செய்யும். 


ALSO READ |  Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?


இன்றைய ஆட்டத்தில் முகமது சிராஜ், சர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள். இன்னும் ஐந்து விக்கெட் கைவசம் உள்ள நிலையில், நாளை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆஸ்திரேலியா அணி விளையாடம்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR