2_வது டெஸ்ட்: இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியாவை விடை 87 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது.
தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியாவை விடை 187 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றது.
வெற்றி பெற 188 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது 2வது இன்னிங்சை ஆடியது. ஆனால் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை 112 ரன்களுக்கு இழந்து. இதன் மூலம் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பபெற்றது.