தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது.


2-வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது.


இந்திய அணி வெற்றி பெற 106 ரன்கள் தேவை என்ற நிலையி தனது 2-வது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலே 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் லோகேஷ் ராகுல். 


3-ம் நாள் ஆட்ட முடிவில் முரளி விஜய்(6), லோகேஷ் ராகுல்(13) களத்தில் உள்ளனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.


இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.