IND VS AUS: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும், மேலும் இந்தியாவின் தற்போதைய புள்ளிகள் சதவீதம் 64.06 என்று இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.  தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இருப்பினும், ஆஸ்திரேலியா மீண்டு வந்து, அடுத்த இரண்டு டெஸ்டில் இந்தியாவை வெல்வதைத் தடுத்தால், ஆஸ்திரேலியா 63.16 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023: தோனி சேப்பாக்கத்தில் விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் போட்டி..! தேதி இங்கே


இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் தொடரில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தை 2-0 என தோல்வி அடைந்தால் அதன் மூலம் இலங்கை நியூசிலாந்தை தோற்கடித்து, இந்தியா ஆஸ்திரேலியாவை 2-0 என வெற்றி பெற்றால், இறுதிப்போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை சந்திக்கும்.  இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா தொடரை 4-0 என இழந்தால், அவர்களின் புள்ளிகள் சதவீதம் 60க்கு கீழே குறைந்து, இந்தியா-இலங்கை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.



ஆஸ்திரேலியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் தோற்றால், இந்தியாவுடன் சேர்ந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்த சூழ்நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்வதற்காக இந்தியா மற்றொரு டெஸ்டில் வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கும். 
தொடர் 2-1 அல்லது 2-2 என முடிவடையும் சாத்தியமில்லாத சூழ்நிலையில், இந்தியா மீண்டும் நியூசிலாந்தை நம்பியிருக்க வேண்டும். இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்டில் முக்கிய பங்கு வகித்தனர், இது இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அடுத்த இரண்டு டெஸ்டிலும் தங்கள் ஃபார்மைத் தொடர முடிந்தால், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், ஆஸ்திரேலியா ஒரு வலுவான அணி என்பதை மறக்க வேண்டாம்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (Wk), இஷான் கிஷன் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.


மேலும் படிக்க | தோனியின் சாதனையை சமன் செய்த பந்துவீச்சாளர்... அடுத்தது ரிச்சர்ட்ஸின் சாதனை தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ