பிரிஸ்பேன்: காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டில் வெற்றிபெற செவ்வாயன்று இந்தியா 324 ரன்கள் எடுக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்களன்று நீட்டிக்கப்பட்ட இறுதி செஷனில், 328 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்தது. இந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்ட நடுவர்கள் இன்றைய ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். நான்காவது நாளான இன்று இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் 1.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் சுப்மான் கில் முறையே 4 மற்றும் 0 ரன்களில் ஆட்டமிழக்காமல் க்ரீசில் உள்ளனர்.


இறுதி நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு ஆட்டத்திற்கு ஏற்றதாக இல்லை. மழை பெய்யாமல் இருந்து பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் தொடரை வெல்ல வெண்டும் என்பதே இரு அணிகளின் பிரார்த்தனையாகவும் இருக்கும். 2018-19 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த டெஸ்டை டிரா செய்தாலே இந்தியாவிடம் டிராஃபி தங்கிவிடும்.


காபா மைதானத்தில் இதுவரையிலான வெற்றிகரமாக சேசின் இலக்கு 236 ஆக இருந்தது. 1951 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 236/7 என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை முடித்தது. எனினும், டிம் பெயின் தலைமையிலான இந்த ஆஸ்திரேலிய அணிக்கு, சிட்னி டெஸ்டில் இந்திய அணி (Team India) காட்டிய பொறுமையும் நிதானமும் கண்டிப்பாக நினைவில் இருக்கும்.


முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டமிழக்கவைத்தது.


ALSO READ: டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை


ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) இரண்டாவது இன்னிங்சில் அணியில் அதிக ரன்களை எடுத்தார். 74 பந்துகளில் 55 ரன்களை எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 7 பௌண்ட்ரிகளையும் அடித்தார். டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரும் 48, 38 மற்றும் 37 ரன்களுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினர். பாட் கம்மின்ஸ் மற்றும் கேப்டன் டிம் பெயின் ஆகியோரும் 28 மற்றும் 27 ரன்களை எடுத்தனர்.


இந்தியாவைப் பொறுத்தவரை, வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தான் போட்ட 19.5 ஓவர்களில் 73 ரன்களை கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் 61 ரன்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


முன்னதாக, ஆஸ்திரேலியாவின் (Australia) முதல் இன்னிங் ஸ்கோரான 369 க்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா 336 ரன்களை எடுத்தது.


அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டை இந்தியாவும் வென்றன. சிட்னியில் (Sydney) நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடர் தற்போது சமநிலையில் உள்ளது.


விரிவான ஸ்கோர்கார்ட்:


ஆஸ்திரேலியா:


முதல் இன்னிங்ஸ் - 369


இரண்டாவது இன்னிங்ஸ் – 294 (ஸ்டீவ் ஸ்மித் 55, டேவிட் வார்னர் 48; முகமது சிராஜ் 5/73)


இந்தியா:


முதல் இன்னிங்ஸ் – 336


இரண்டாவது இன்னிங்ஸ் - நான்காம் நாள் ஸ்டம்பில் 4/0 (ரோஹித் சர்மா 4 *, சுப்மன் கில் 0 *; மிட்செல் ஸ்டார்க் 0/4 )


ALSO READ: IPL Auction 2021: இந்த விதிகளின் கீழ் வீரர்கள் தனியார் ஏலத்தில் பங்கேற்கலாம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR