IND vs AUS: 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் இந்தியா WCT பைனலுக்கு தகுதி பெறுமா?
IND vs AUS 4th Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23ல், இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதி பெற்றது.
IND vs AUS 4th Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23ல், இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் 2வது இடத்திற்கு இரண்டு அணிகள் தற்போது போட்டியில் உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஜோகன்னஸ்பர்க்கில் புதன்கிழமை தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட தொடர் முடிவு இதனை பாதிக்காது. கடைசி பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் அதே நாளில் தொடங்கும் இலங்கை-நியூசிலாந்து தொடரின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி இடம் தீர்மானிக்கப்படும்.
மேலும் படிக்க | India vs Australia: 4வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்! முக்கிய வீரருக்கு ஓய்வு!
ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டு பெரிய வெற்றிகளை இந்தியா பெற்று முன்னணியில் இருந்தது. ஆஸ்திரேலியா இந்தூரில் வெற்றி பெற்று இந்த தொடரில் 2-1 என்ற இடத்தை பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றது இதுவே முதல் முறை.
இந்தியா WTC புள்ளிகள் பட்டியலில் 60.29 PCT உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் இறுதிப் போட்டிக்கு இன்னும் முன்னேறவில்லை, மூன்றாவது இடத்தில் இலங்கை உள்ளது, இது இந்தியாவிற்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது. எனவே WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வழிகள் இதோ.
1) இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், 4வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தகுதி பெரும்.
2) இந்தியா டிரா செய்தால், அவர்களின் PCT 52.9 ஆக குறையும், ஆனால் இலங்கை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யத் தவறினால் இந்தியா தகுதி பெரும்.
3) இந்தியா தோற்றால், இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தோல்வி பெறாமல் இருந்தால் இந்தியா தகுதி பெரும்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
மேலும் படிக்க | Viral Video: பழைய பன்னீர்செல்வமாக வந்த தோனி... சிக்ஸரில் சொக்கி நிற்கும் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ