இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 3-வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல், பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 5 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.


அடுத்து களம் இறங்கிய விராட் கோலி ஓவரில் 2-வது மற்றும் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, கடைசி பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய தவானும் 5-வது ஓவரின் 4-வது பந்தில் தவான் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். 


இதனால் இந்தியா 4.4 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 


அவர் 56 பந்தில் அரைசதம் அடித்தார் யுவராஜ் சிங். இவரது அரைசதத்தால் இந்தியா 21.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 28-வது ஓவரின் 5-வது பந்தில் டோனி சிக்ஸ் ஒன்று அடித்தார். இதன்மூலம் இந்தியா 150 ரன்னைத் தொட்டது. 30-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டோனி அரைசதம் அடித்தார்.


சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் அரைசதத்தை சதமாக மாற்றினார். 33 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார். அதன் சிறு நேரம் கழித்து டோனியும் சதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா 45 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்துள்ளது. யுவராஜ் சிங் 150 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.


தற்போது டொனியுடன்  பாண்டியா களத்தில் விளையாடி வருகின்றனர்.