மும்பை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், விசாகபட்டினம் மற்றும் மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது. 


டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களும், இந்தியா, 631 ரன்களும் குவிந்தன. 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 182 ரன்கள் எடுத்திருந்தது. 


இன்று 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, 231 ரன்களை கடந்து, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் முனைப்பிலிருந்தது. ஆனால், 195 ரன்களில் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர்குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


இந்த வெற்றியின் மூலம், இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, சென்னையில் டிசம்ப்ர 16-ம் தேதி தொடங்கவுள்ளது.