IND vs Eng, Day 2: இரட்டை சதமடித்தார் Joe Root, ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 555/8
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து ஒரு பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நோக்கி விளையாடுகிறது என முன்பே கூறியிருந்த ஜோ ரூட், அதை அடைய அணிக்கு பெரும் உதவியாக இருந்தார். இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் (Joe Root) சனிக்கிழமையன்று தனது ஐந்தாவது இரட்டை சதத்தை அடித்தார். அபாரமாக ஆடிய ரூட் 218 ரன்களை எடுத்தார். டாம் பெஸ்ஸும் ஜாக் லீச்சும் முறையே 28 மற்றும் 6 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
263/3 என்ற ஸ்கோருடன் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து திடமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ரூட் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியை முன்னோக்கி செல்ல வைத்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 124 ரன்களை சேர்த்தது. ஸ்டோக்ஸ் 82 ரன்களில் ஷாபாஸ் நதீமால் நீக்கப்பட்டார்.
இருப்பினும், ரூட் மறுமுனையில் சீராக ஆடிக்கொண்டிருந்தார். தனது 100 வது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். 218 ரன்களை எடுத்த ஜோ ரூட் நதீம் பந்தில் அட்டமிழந்தார். நதீம் 44 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
சோர்வாக காணப்பட்ட இந்தியாவின் (Team India) தாக்குதலில் ஸ்டோக்சும் தன் திறமையைக் காட்ட விரும்பினார். ஆஃப்-ஸ்பின்னர் ஆர் அஸ்வினின் பல பந்துகளை அவர் பௌண்டரிக்கு விளாசினார்.
ALSO READ: IND vs Eng: ஜோராக ஆடிய Joe Root, முதல் நாள் ஆட்டம் இங்கிலாந்து பக்கம்
ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் ஆகியோருக்கு எதிரான எல்.பி.டபிள்யூ முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னர், வீணாக, பின்னுக்கு- பின் ரெவ்யூக்களை கேட்டுக்கொண்டிருந்தது இந்திய அணி.
மதிய உணவு மற்றும் தேநீர் இடைவெளிக்கு இடையில் ஆஸ்திரேலிய அணி 99 ரன்களை சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இடையிலான கூட்டால் இங்கிலாந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஸ்டோக்ஸின் விக்கெட்டுக்குப் பின் வந்த போப், ரூட்டுடன் சேர்ந்து ரன்களைக் கூட்டினார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அனுபவமிக்க மூன்று பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோர் பொறுமையுடன் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை நதீம் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் அதிக ரன்களை கொடுத்தார்.
ALSO READ: IND vs ENG முதல் டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR