India vs England: கடந்த 2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது ஷுப்மான் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டது.  இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை.  பின்பு மீதமுள்ள போட்டிகளில் விளையாடினார் கில். ஆனாலும் அவரால் பழைய பார்மிற்கு திரும்பமுடியவில்லை.  ஷுப்மான் கில் பேட்டின் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.  தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி உள்ளார் ஷுப்மான் கில்.  ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் போது கில் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் ஏதும் இன்றி டக் அவுட்டானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா...? சகோதரர் அளித்த விளக்கம்


ஷுப்மான் கில் இரண்டாவது டெஸ்டிலும் பேட்டிங்கில் சொதப்பினார். முதல் இன்னிங்ஸில் 46 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்த கில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.  24 வயதான ஷுப்மான் கில் இந்திய அணியின் இளவரசன் என்று புகழப்பட்டார்.  ஆனால் தற்போது ஒவ்வொரு ரன்கள் அடிக்கவும் சிரமப்பட்டு வருகிறார்.  இந்நிலையில், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மான் கில் இடத்தில் புஜாராவை மீண்டும் அணியில் எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.  


இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷுப்மான் கில்லின் மோசமான ஆட்டத்திற்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்திய ரவி சாஸ்திரி, இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் கடினமாக முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேலும் புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் அணியில் மீண்டும் இடத்தை தக்கவைத்து கொள்ள கடுமையாக போராடி வருவதாக குறிப்பிட்டார்.  உள்நாட்டு கிரிக்கெட்டில் சௌராஷ்டிராவுக்கான புஜாராவின் சமீபத்திய பேட்டிங் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது என்று கூறி உள்ளார். " இளைஞர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். வெளியில் சீனியர் வீரர்கள் இருப்பதை மறக்க வேண்டாம்.  புஜாரா ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்து வருகிறார், மேலும் அவர் எப்போதும் பிசிசிஐ ரேடாரில் இருக்கிறார்" என்று ரவி சாஸ்திரி கூறினார்.


இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டி இந்திய வீரர்களுக்கு முக்கியமானது. கிரீசில் எவ்வளவு நேரம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதை இளம் வீரர்கள் உணர வேண்டும். புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் அதே நேரத்தில் பிசிசிஐ கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது, இதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி மேலும் கூறியுள்ளார். "இது ஒரு டெஸ்ட் மேட்ச். நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை என்றால், நீங்கள் எல்லாவிதமான பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்வீர்கள்" என்று சாஸ்திரி கூறினார்.


சௌராஷ்டிராவுக்காக புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பார்மில் இருந்து வருகிறார்.  ஒரு அணிக்காக  7000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா. இந்திய டெஸ்ட் அணியில் ஜூன் 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் இடம் பெறவில்லை.  தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில் போன்றவர்கள் ரன்கள் அடிக்க போராடி வருவதால், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ