IND vs ENG: விராட் கோலி இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்! இந்தியாவின் பிளேயிங் 11!
India vs England: ஐதராபாத்தில் நடக்க விருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs ENG 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. அடுத்த 4 போட்டிகள் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடைபெற உள்ளன. விக்கெட் கீப்பராக தென்னாபிரிக்க தொடரில் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கிலாந்து தொடருக்கான அணியில் இரண்டு இளம் விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விராட் கோலியுடன் U19 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யார் யார் தெரியுமா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இரண்டு கூடுதல் விக்கெட் கீப்பர்களான கே.எஸ்.பாரத் மற்றும் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளனர். " கேஎல் ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். தேர்வில் இருந்தே நாங்கள் அதை பற்றி தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். எங்களுக்காக தக்கவைக்கக்கூடிய மற்ற இருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். தென்னாப்பிரிக்காவில் ராகுல் எங்களுக்காக ஒரு அற்புதமான வேலையை செய்தார். அந்த தொடரை சமன் செய்வதில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த சூழ்நிலையில் விளையாடினால், எங்களிடம் உள்ள மற்ற இரண்டு கீப்பர்களுக்கு இடையே தேர்வு இருக்கும்" என்று டிராவிட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து நட்சத்திர பேட்டர் விராட் கோலி விலகி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாட மாட்டார். அவருக்கான மாற்று வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா முதல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக உள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக அவேஷ் கான், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்று உள்ளனர். கோலியின் இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புள்ளது. மேலும் கேஎல் ராகுல் 5வது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், கே.எஸ்.பரத், ஆர். அஷ்வின், ஆர். ஜடேஜா, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), கே.எஸ்.பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC) மற்றும் அவேஷ் கான்.
மேலும் படிக்க | IND v ENG: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் அஷ்வின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ