India vs New Zealand: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் புதன்கிழமை (ஜனவரி 18) ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார்.  கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கிய கில், ஆட்டத்தின் 49வது ஓவரில் லாக்கி பெர்குசனிடம் மூன்று சிக்ஸர்களை அடித்து இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்து மைல்கல்லை எட்டினார்.  ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்த சாதனையை நிகழ்த்தினார். 23 ஆண்டுகள் 132 நாட்களில் 50 ஓவர் வடிவத்தில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தனது சக இந்திய அணி வீரர் இஷான் கிஷனை முறியடித்துள்ளார்.  கடந்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் கிஷன் இந்த சாதனையை படைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க: பொங்கல் வின்னர் விராட் கோலி... தூள் தூளாகி போன சச்சின் சாதனை!


ஷுப்மான் கில் -  23 ஆண்டுகள் 132 நாட்கள்


இஷான் கிஷன் - 24 ஆண்டுகள் 145 நாட்கள் 


ரோஹித் ஷர்மா - 26 ஆண்டுகள் 186 நாட்கள் 


சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷானுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். சச்சின் 2010ல் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200* ரன்கள் எடுத்தார். இருப்பினும் இஷான் கிஷான், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரராகத் தொடர்கிறார். பங்களாதேஷுக்கு எதிராக 200 ரன்களை எட்டுவதற்கு வெறும் 126 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.


2014-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்தூரில் 140 பந்துகளில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த போது, ​​50 ஓவர் வடிவத்தில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது அதிவேக இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ஆவார்.  தொடர்ந்து மூன்று சிக்ஸர்களுடன் 200 ரன்களை அடித்த முதல் பேட்டர் ஷுப்மான் கில், கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்து இரட்டை சதத்தை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.


மேலும் படிக்க | Rahul Dravid Health: ராகுல் டிராவிட்டுக்கு உடல்நலக்குறைவு.. ஓய்வு இல்லையா? - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ