IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
Rishabh Pant Fitness : இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் புனேவில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்த அப்டேட்டை வழங்கி உள்ளார்.
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், நாளை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். புனே டெஸ்டில் விக்கெட் கீப்பராக பந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் 100 சதவீதம் அவர் விளையாடுவார் என்று கூறவில்லை. அக்டோபர் 17ம் தேதி நியூஸிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 37வது ஓவரில் பந்து ரிஷப் பந்தின் முட்டியில் பட்டது. ஏற்கனவே விபத்தில் சிக்கி குணமடைந்த அதே காலில் பந்து பட்டதால் வலியில் துடித்தார். பிறகு ஓய்வில் இருந்த அவர், இரண்டு இன்னிங்சிலும் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதில் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார்.
மேலும் படிக்க | திரும்பி வந்துட்டேனு சொல்லு! இந்திய அணியில் மீண்டும் இணைந்த முக்கிய வீரர்!
நடப்பதற்கே சிரமப்பட்ட பந்தை உடனடியாக இந்திய மருத்துவக் குழுவை மீட்டு சோதனைகளை மேற்கொண்டனர். மைதானத்தில் இருந்து கூட ட்ரெஸ்ஸிங் ரூம் வரை பந்தால் நடக்க முடியவில்லை. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இருப்பினும் வலியுடன் பந்த் 2வது இன்னிங்சில் பேட்டிங் இறங்கி 99 ரன்கள் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடினாலும், நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் செய்தியாளர் சந்திப்பில், அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பந்த் பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ரிஷப் பந்த் நன்றாக விளையாடி வருகிறார். அவர் 2வது டெஸ்டில் விளையாடுவார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். "தற்போது அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடுகின்றனர். முதல் டெஸ்டில் நீண்ட நேர பந்துவீச்சு இல்லை, அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் நன்றாக ஓய்வில் உள்ளனர். ரிஷப் மிகவும் தைரியசாலி, பந்திற்கு போட்டி முடிந்த அடுத்த நாள் வரை வலி இருந்தது. முழங்காலில் சிறுது அசௌகரியம் இருந்தது, இருப்பினும் அவர் 2வது டெஸ்டில் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். கார் விபத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ள பந்த் வழக்கம் போல தனது அதிரடியை வெளிப்படுத்தி வருகிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்ததேச இந்திய அணி:
ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் கான், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ