இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக். 11) நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 1 போட்டிகளை வென்றதால், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்த போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தாவன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரின் முடிவுக்கு போட்டியின் தொடக்கத்திலேயே கைமேல் பலன் கிடைத்தது. 



வாஷிங்டன் சுந்தர் வீசிய மூன்றாவது ஓவரிலேயே குவின்டன் டி காக் 6 ரன்கலில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, மற்றொரு ஓப்பனரான மாலனும் 15 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். கடந்த போட்டியில், 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டிய ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம் ஜோடி இம்முறை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாகவே வெளியேற்றினர். 


மேலும் படிக்க | கங்குலிக்கு அடுத்து பிசிசிஐ-ன் புதிய தலைவர் இவரா? வெளியான தகவல்!


அடுத்தடுத்து விக்கெட் கேப்டன் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் டெயிலெண்டர்களை குல்தீப் யாதவ் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட் எடுக்க தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதுவே, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். 



தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கிளேசன் 34 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் மார்கோ யான்சன் மட்டும் ஒரே ஒரு சிக்ஸரை அடித்திருந்தார், வேறு யாரும் சிக்ஸர் அடிக்கவில்லை. மொத்தம் 11 பவுண்டரிகள் மட்டுமே எடுக்கப்பட்டது.  இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 100 ரன்கள் மட்டுமே இலக்கு என்பதால், இந்திய அணி எளிதாக வென்று ஒருநாள் தொடரையும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | விக்ரம் வேதா ஸ்டைலில் இஷானுக்கு வாழ்த்து கூறிய கில்! ஹ்ரித்திக் ரோஷனின் ரிப்ளை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ