IND vs SA: ஏன் புவனேஷ்வர் குமார் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வில்லை
புவனேஷ்வர் குமார் ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்தார்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 (புதன்கிழமை) முதல் அக்டோபர் 23 (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரும் புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் கடும் பயிற்சி ஈடுபட்டு உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலியின் முழு கவனம் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதில் இருக்கிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு பல சாதகமான சூழ்நிலை உள்ளன. அதேவேளையில் விராட் கோலிக்கு பல சவால்களும் உள்ளன. இதில் உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நேரத்தில், இந்திய அணி மிகவும் வலுவானதாக கருதப்படுகிறது. ஆனால் விராட் கோலியின் அணிக்கு தென்னாப்பிரிக்க அணியால் கடுமையான பதிலடி கொடுக்க முடியும். மேலும் தென்னாப்பிரிக்கா அணியை சாதாரணமாக கருத முடியாது. இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால் அது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் டெஸ்ட் தொடர் அணிக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுவதற்கு ஜஸ்பிரித் பும்ராவின் காயம். இது தவிர, அணியில் புவனேஷ்வர் குமார் ஆடுவதும் கேள்வியிக்குறியாக உள்ளது.
புவனேஷ்வர் குமார் சிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். அவர் உலகின் மிக ஆபத்தான பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த ஒரு வருடமகா உடற்தகுதி காரணமாக புவனேஷ்வர் குமார் அணியிலிருந்து வெளியேவே உள்ளார். அவரின் இடத்தில் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி போன்ற பந்து வீச்சாளர்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். அத்தகைய சூழ்நிலையில், புவனேஷ்வர் குமார் இனி இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது சாதாரணமானது அல்ல.
புவனேஷ்வர் குமார் ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் மற்றும் மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் நடுவில், காயம் மற்றும் உடற்தகுதி காரணமாக ஒருபோதும் டீம் இந்தியாவுக்கு சிறந்த தேர்வாக அவர் தெரியவில்லை. ஆனால் புவிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அவர் சிவப்பு பந்து (ஒருநாள்) மற்றும் வெள்ளை பந்து (டெஸ்ட்) இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். தென்னாப்பிரிக்காவில், அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 20.30 சராசரி கொண்டு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் 30 மற்றும் 33 ரன்கள் எடுத்து தனது சிறந்த பேட்டிங்கையும் நிருபித்தார்.
ஆனால் அதன்பிறகு புவி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் அணியில் மீதமுள்ள பந்து வீச்சாளர்களின் செயல்திறன் புவியை பின்னால் தள்ளியது. ஒருநாள் போட்டிகளில் புவியை ஒரு முக்கியமான பந்து வீச்சாளராக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருதுகிறார். ஆனால் அவரை விட இப்போது அணியில் சிறந்த தேர்வுகள் உள்ளன என்றும் அவர் நம்புகிறார்.