இந்த முறையும் சதத்தை மிஸ் செய்த விராட் கோலி!
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக விலகியிருந்த விராட் கோலி இந்த டெஸ்டில் அணியில் இணைந்தார். 1 - 1 என்று இந்த தொடர் உள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி (KOHLI)முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சிராஜ்க்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
ALSO READ | ஐபிஎல் 2022 - அகமதாபாத் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா?
ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 12 ரன்களில் வெளியேறினார். இந்த தொடர் முழுவதும் சொதப்பிய மயங்க் அகர்வால் இந்தப் போட்டியிலும் 15 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சொதப்பி வரும் பூஜாராவிற்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரகானே மற்றும் ரிஷப் பண்ட் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
மறுமுனையில் பொறுப்புடன் அடைய கோலி அரை சதம் அடித்தார். இரண்டு வருடங்களாக அடிக்காத சதத்தை இந்த போட்டியில் அடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மிகவும் பொறுமையாக விளையாடி வந்தார். அவரது டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக பந்தில் அரைசதம் அடித்தது இது இரண்டாவது முறை. மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே போக வேறு வழியின்றி ஒரு தவறான ஷாட் அடிக்க 79 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் அடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ALSO READ | ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வெங்கடேச ஐயர் சிறந்த தேர்வா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR