முதல் நாளில் இந்தியா முக்கிய விக்கெட்களை பறிகொடுத்து உள்ளது. 4 விக்கெட் இழப்பு 264 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இந்திய கேப்டன் விராத் மற்றும் ரஹானே சேர்ந்து விளையாடி வந்தனர். தேநீர் இடைவேளைக்கு பிறகு ரஹானே 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். தற்போதைய நிலவரப் படி 66 ஓவரில் இந்திய 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவன்  தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார்.


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தவான் மற்றும் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் ராகுல் 85 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்த வந்த புஜாரா, தவானுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஷிகர் தவன் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.


 



 


இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 


ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய தற்போது முதல் நாள் உணவு இடைவேளை முன் வரை 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்துள்ளது.


தவான் 64(66) மற்றும் ராகுல் 67(97) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


 



 


ஏற்கனவே 2-0 என தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இன்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடுகிறது. சிறு மாற்றங்களுடன் களம் இறங்கும் இலங்கை அணி தனது ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.