இலங்கை உடனான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அபார வெற்றி பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 
 
முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. பின்னர் இந்தியா - இலங்கை அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் போட்டிகளிலும் இந்தியா 2-1 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 



இதனையடுத்து மீதமுள்ள மூன்று டி20 போட்டிகள் கடந்த டிச.,20-ஆம் நாள் முதல் துவங்கியது. தொடரின் முதல் டி20 போட்டி கட்டாக்கில் உள்ள பராபட்டி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


இதனையடுத்உ இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து போட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸ் உட்பட 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 89(49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, ஆரம்பத்திலேயே தனது விக்கட்டுகளை இழக்க துவங்கியது. இதனால் இலங்கை 17.2 ஓவரில் தனது அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமை எடுத்தது.


இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போட்டியை வென்றது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது இந்தியா. இலங்கை அணி தரப்பில் டிக்வெல்லா, தரங்கா, குசல் பெரெரா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!