இன்னும் சில நாட்களில் இந்த வருடம் முடிந்து புது வருடத்தில் நுழைய போகிறோம். எனவ 2016-ல் இந்தியாவின் சிறந்த விளையாட்டு தருணங்களை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோஹ்லி தலைமையில் 2016-ல் அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது:-


விராட் கோஹ்லி தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் இந்திய அணி எடுத்து சாதனை செய்துள்ளது. 2016-ல் விராட் கோஹ்லி தலைமையில் விளையா டிய அனைத்து டெஸ்ட் போட்டியிலும் வென்றுள்ளது. தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.  



2016-ல் விளையாடிய டெஸ்ட் போட்டிகள் ஒரு பார்வை.


4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை 2-0 என்ற வித்தியாசத்தில் இந்தியா வென்றது.


3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை 3-0 என்ற வித்தியாசத்தில் இந்தியா ஒய்ட்வாஷ் செய்தது.


5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 4-0 என்ற வித்தியாசத்தில் வென்று இந்தியா சாதனை செய்தது.



ரியோ ஒலிம்பிக் பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் வரலாற்றை சாதனை:


ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பி.வி.சிந்து நிகழ்த்தி இருக்கிறார்.



வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சாக்‌ஷி மாலிக் 8-5 என்ற புள்ளி கணக்கில் அய்சுலுவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.


ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் இந்தியாவின் சாதனை: 


இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். இதில் மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். இதே போல் குண்டு எறிதல் போட்டியில் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினார்.



இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக எட்டு வெற்றிகள்:


பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான போட்டியில் டெக்னிகல் நாக்-அவுட் முறையில் விஜேந்தர் சிங் டன்சானியா குத்துச்சண்டை வீரர் பிரான்சிஸ் செகாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன்முலமாக 8-வது முறையாக தொடர் வெற்றிபெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதில் 7 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றது குறிப்பிடத்தக்கது.