`வந்த இடம் என் காடு...` பாகிஸ்தான் தான் பலியாடு - ஆதிக்கத்தை தொடரும் இந்தியா
IND vs PAK: உலகக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய வெற்றி பெற்றது.
ICC World Cup 2023, IND vs PAK: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இன்று (அக். 14) நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதலில் பந்துவீசி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் மட்டும் பாகிஸ்தான் எடுத்திருந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.
ஹாட்ரிக் வெற்றி
இந்தியா அணி பந்துவீச்சாளர்கள் சிராஜ், பும்ரா, குல்தீப், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக, பும்ரா 7 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். பந்துவீச்சை போலவே பேட்டிங்கிலும் இந்தியா சிறப்பாக விளையாடியது. 30.3 ஓவர்களிலேயே இந்தியா 192 ரன்கள் என்ற இலக்கை எட்டி தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரோஹித் விளாசல்...
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 86 ரன்களை அடித்திருந்தார். அவர் 63 பந்துகளில் தலா 6 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் அடித்தார். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்திருந்தார். சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் தலா 16 ரன்களையும், கேஎல் ராகுல் 19 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகன் விருதை பும்ரா வென்றார்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் வீரரை கேலி செய்த கோலி - அதுவும் 1 லட்சம் பேருக்கு முன் - எதனால் தெரியுமா?
தொடரும் ஆதிக்கம் 8-0
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலக் கோப்பை வரலாற்றில் 8ஆவது முறையாக பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இதன்மூலம், உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற பெருமையை இந்தியா தக்கவைத்தது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
தொடர்ந்து, பெரிய ரன்ரேட்டில் வெற்றிப்பெற்றதை அடுத்து, புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது, நான்காவது இடத்தில் முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ