Smriti-ன் அதிரடி ஆட்டத்தால் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!
ICC மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது மேற்கிந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 83(55) ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஸ்ம்ரிதி மந்தனா 83(55), ஹர்ப்ரீட் கரூர் 43(27) குவித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் எல்லெய்ஸ் பெர்ரி 3 விக்கெட் குவித்தார்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கனைகள் பெத் மோனி 19(17), எல்லெய்ஸ் வில்லானி 6(9) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து வெளியேறினர். அதிகபட்சமாக அசுலே கார்ட்னர் 20(19) ரன்கள் குவித்தார்.
ஆட்டத்தின் 19.4-வது பந்தில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி தரப்பில் அஞ்சு பட்டில் 3 விக்கெட்டுகளை குவித்தார். இதனையடுத்து இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்தியா ICC மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் நவம்பர் 23-ஆம் நாள் நடைப்பெறும் இறுதி போட்டியில் இந்தியா; இங்கிலாந்து (அ) மேற்கிந்தியா அணியினை எதிர்கொள்கிறது.