மயங்க் அகர்வால் அபார சதம்; முதல் நாள் முடிவில் இந்தியா 273 ரன் குவிப்பு!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனே மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் (108), சட்டேஷ்வர் புஜாரா (58) ஆகியோர் குறிப்பிடத்தக்க (138) ரன்கள் குவித்து சென்றனர். கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்தியாவை 273/3 என்ற கணக்கில் வலுவான நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்நிலையில் இன்று ஆட்டம் 85.1-வது பந்தை எட்டிய நிலையில் மோசமான வெளிச்சம் காரணமாக முடித்துக்கொள்ளப்பட்டது. அப்போதைய நிலவரப்படி களத்தில் விராட் கோலி 63(105), ரஹானே 18(70) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.