இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையாயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையிலும், டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையிலும் இன்று துவங்கி ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.


அந்த வகையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங்க் தேர்வு செய்து விளையாடியது. 



துவக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் 24(31), அரோன் பின்ச் 6(11) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய உஷ்மான் 59(81), மார்ஸ் 54(70), பீட்டர் ஹான்ஸ்கோம்ப் 73(61) என அரைசதங்களுடன் வெளியேறினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.


இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் குவித்து ஆஸ்., ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 0(1) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தார். எனினும் மறுமுனையில் ரோகித் ஒன்-மேன் ஆர்மியாக நின்று 133(129) ரன்கள் குவித்தா போராடினார். இந்திய அணியின் முக்கிய வீர்கள் கோலி, அம்பத்தி ராயுடு ஆகியோரும் ரன் ஏதம் எடுக்காமல் வெளியேறினர். ரோகித்துக்கு பக்கபலமாக நின்ற தோனி 51(96) ரன்கள் குவித்தார், எனினும் இந்திய அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.


இந்திய அணி வீரர்களின் தொடர் வெளியேற்றத்தால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து ஆஸி., முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.