இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. இந்த முடிவு, இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை வென்றால், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக வரமாட்டார்: ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம்


இந்த தொடரை வெல்வதற்கு, இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். எனவே, இந்த தொடருக்காக இந்திய அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணியின் 20 ஓவர் பார்மேட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.


அவர்களுக்கு பிசிசிஐ மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் கூட விளையாடவில்லை. அவர்கள் எதிர்வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்திருப்பதால் ரோகித் சர்மா, விராட் கோலியின் கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான், ஐபிஎல் தொடர்களில் இருவரின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்களா? இல்லையா? என்பதை கூற முடியும். 


இவர்கள் இருவருடன் சேர்த்து ரிங்கு சிங்க போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணியின் 20 ஓவர் பார்மேட்டில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு இந்த தொடர் தங்களின் திறமையை நிரூபிக்க அருமையான வாய்ப்பு. 


இந்திய அணி: ஜஸ்பிரிட் புஜாரா (C), ரோஹித் ஷர்மா (VC), சுப்மன் கில், யஷஸ்வீ ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜitesh ஷர்மா (wk), சஞ்சு சாம்சன் (wk), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்


மேலும் படிக்க | திடீரென ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்... ஐபிஎல்தான் முக்கிய காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ