20 ஓவர் உலகக்கோப்பையின் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வெஸ்ட் இண்டீஸின் பர்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த உலகக்கோப்பையை வென்று மீண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 9 ரன்களிலும், ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | T20 Worldcup Final : டாஸிலேயே இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம், கோப்பை கன்பார்ம்


அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலைக்கு சென்றது. அப்போது, மிடில் ஆர்டரில் விராட் கோலியுடன் நிலைத்து நின்று அக்சர் படேல் விளையாட மெதுவாக சிக்கலில் இருந்து மீண்டது. அக்சர் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷிவம் துபே 27 ரன்கள் எடுத்தார். மற்ற பிளேயர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆடாத நிலையில் விராட் கோலி  59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.



இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணியும் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினர். டிகாக் 39 ரன்களும், ஸ்டப்ஸ் 31 ரன்களும் எடுக்க, கிளாஸன் மட்டும் தனியுலகத்தில் அதிரடி காட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவர் அதிரடியில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் எளிதாக வெல்லும் நிலையில் இருந்தது. 27 பந்துகளில் 52 ரன்களில் அவர் ஆட்டமிழக்கும் போது தென்னாப்பிரிக்கா அணிக்கு 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. கிளாஸனின் விக்கெட் ஆட்டத்தின் முதல் திருப்பு முனையாக அமைந்த நிலையில் அடுத்து ஓவர்களை வீச வந்த பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா பிளேயர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தனர்.


இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையாக இருந்தபோது ஹர்திக் பாண்டியா ஓவர் வீச வந்தார். முதல் பந்தையே சிக்சர் அடிக்க மில்லர் முயற்சி செய்ய, பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் அபாரமாக கேட்ச் பிடித்து போட்டியின் போக்கை ஒட்டுமொத்தமாக தலைகீழாக மாற்றினார். இது இந்திய அணிக்கு அடுத்த திருப்பு முனையாக அமைந்தது. முடிவில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியனானது.


மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : இந்திய அணி நிர்ணயித்த 177 ரன்கள், தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்யுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ