இன்று முதல் டி-20 போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா வெல்லப்போவது யார்..?
இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் டி-20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி துவங்கி மார்ச் 13-ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் டி-20 போட்டி இன்று பிப்ரவரி 24 ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆட உள்ளனர்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது, அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
இதனால் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா அணி தயாராகி வருகிறது. தற்போது இந்திய அணி நல்ல பார்மில் இருப்பதால், அதுவும் சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் இருக்கும். இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா முழு தொடரில் இருந்து ஹார்த்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார். இன்றைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.