இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரர் ஷிகர் தவான் விளையாடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சியின் போது அக்சர் பட்டேல் கணுக் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.


இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


 



 


 



 


 


இந்தியா அணி வீரர்கள்: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரஹானே, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, டோனி (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ்யாதவ், முகமது ‌ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.


ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிரெவிஸ் ஹெட், ஹில்டன் கார்ட்ரைட், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர், நாதன் கவுல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பாக்னர், கேன் ரிச்சர்ட்சன்.