INDvAUS, 2_வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 250 ரன்னுக்கு ஆல்-அவுட்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.
16:55 05-03-2019
48.2 ஓவருக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 116(120) ரன்களும், அடுத்தபடியாக தமிழக வீரர் விஜய் சங்கர் 46(41) ரன்களும் எடுத்தனர்.
16:33 05-03-2019
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். இது இவரின் 40வது சர்வதேச சதமாகும்.
03:38 PM 05-03-2019
நான்காவது விக்கெட்டை இழந்தது இந்தியா... விஜய் சங்கர் 46(41) ரன்களில் வெளியேறினார்.
தற்போது ; 30 ஓவர் | 4 விக்கெட் | 161 ரன்கள்
களத்தில் ; கோலி 63(69) | கேதர் ஜாதவ் 4(3)
03:06 PM 05-03-2019
மூன்று விக்கெட் இழப்பிற்கு இந்தியா 103 ரன்கள் குவித்துள்ளது...
துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 0(6), சிகர் தவான் 21(29) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் 18(32) ரன்களில் வெளியேறினர்.
தற்போதைய நிலையில் 22 ஓவர்கள் முடிவில், விராட் கோலி 46(50), விஜய் சங்கர் 14(17) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
13:09 05-03-2019
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு. இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி களம்காண உள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மார்ச் 2 ஆம் தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ். தோனியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூர் விதார்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற இந்திய அணி முயற்ச்சி செய்யும். அதேபோல முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலிய அணி விளையாடக்கூடும்.