இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று தொடக்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், 


ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.


புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 1-௦ என்ற கணக்கில் முன்னிலை பெற்றுது. பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. ராஞ்சியில் டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.


காயத்தால் கடந்த டெஸ்டில் ஆடாத முரளிவிஜய் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. விஜய் களம் இறங்கினால், 50-வது டெஸ்டில் விளையாடும் 29-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். 


ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி விட்டனர். இதனால் ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. 


இந்தியா: லோகேஷ் ராகுல், முரளிவிஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, கருண் நாயர் அல்லது ஜெயந்த் யாதவ், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.


 



 


ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ரென்ஷா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது ஸ்வெப்சன் அல்லது மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஸ்டீவ் ஓ கீபே, பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஹேசில்வுட்.