India vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் KL ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நியூசிலாந்து, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்த ஒருநாள் தொடர் உள்ளது. அணிக்கு திரும்பியுள்ள மூத்த வீரர்கள் அனைவரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரஜத் படிதார், குல்தீப் சென் ஆகிய இளம் வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்திற்கு எதிரான அவரது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு வாஷிங்டன் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | INDvsBAN: மீண்டும் முக்கிய வீரர் காயம்! தொடரில் இருந்து விலகல்?


இதற்கிடையில், தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஷமி தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏழு ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்திய அணி விளையாடும் முதல் இருதரப்பு தொடர் இதுவாகும். பங்களாதேஷுக்கு உள்நாட்டில் ஆதரவு மற்றும் சொந்த சூழ்நிலையில் விளையாடுவதற்கான நன்மைகள் இருக்கும், ஆனால் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணி தொடரைக் கைப்பற்ற விருப்பமானவர்கள் என்று கருதுகின்றனர்.  இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.


 



முதல் ஒருநாள் போட்டி காலை 11:30 மணிக்கு (IST) தொடங்குகிறது.  தொடர் முழுவதையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.  மேலும் முதல் ஒருநாள் போட்டியின் நேரடி ஒளிபரப்பு SonyLiv ஆப்பில் கிடைக்கும். இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டியில் மோதின. பர்மிங்காமில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா கடைசியாக ஜூன் 2015ல் பங்களாதேஷில் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியது. மிர்பூரில் நடந்த அந்த மோதலில் இந்திய அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என இழந்தது.


மேலும் படிக்க | ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ