இந்திய ஆடவர் அணி, வங்கதேசத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளை அங்கு விளையாட உள்ளது. இதில், 0-2 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிச. 10) நடக்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் பாதிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு பேட்டிங்கில் 9ஆவது வீரராக களமிறங்கி, 28 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். 


துரதிருஷ்டவசமாக அவரால் இந்திய அணியை வெற்றிபெற செய்ய இயலவில்லை. இந்த போட்டியில், ரோஹித் சர்மா மட்டுமின்றி, முன்னணி பந்துவீச்சாளரான தீபக் சஹாரும் காயம் ஏற்பட்டது. அவரும் பந்துவீச்சின்போது, களத்தில் இருந்து வெளியேறிய பின்னரும், 8ஆவது வீரராக இறங்கி பேட்டிங் ஆடினார். 



மேலும் படிக்க | PainFul Plays: வலியெல்லாம் மேட்டரே இல்லை! காயத்துடன் களம் கண்ட கிரிக்கெட்டர்கள்


தொடர்ந்து, இந்திய அணியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,"இந்திய அணி சில காயங்கள் காரணமாக போராடி வருகிறது. அது அணிக்கு உகந்ததல்ல, அவை எளிதானதும் அல்ல. தீபக் சாஹர் மற்றும் ரோஹித் சர்மா நிச்சயமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். குல்தீப் சென்னும் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். 



ரோஹித் மீண்டும் மும்பைக்கு சென்று காயம் குறித்து, நிபுணருடன் கலந்தாலோசித்த பின்னரே, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பது தெரியவரும். விரைவில் அதுகுறித்து தெரியவரும். ஆனால், நிச்சயமாக அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார்" என தெரிவித்துள்ளார். 


இதன்மூலம், வரும் 14ஆம் தேதி தொடங்கும் இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. டெஸ்ட் தொடரில் யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | IND vs BAN : கடைசிவரை போராடிய ரோஹித்... வென்றது வங்கதேசம் - தொடரை இழந்த இந்தியா !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ