IND vs BAN: பயிற்ச்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணியை துவசம் செய்த இந்தியா!!
இன்றைய பயிற்ச்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சு தேர்வு செய்து விளையடியது. வங்கதேசம் அணி வெற்றி பெற 360 ரன்கள் தேவை.
19:33 28-05-2019
வங்கதேசம் அணிக்கு எதிரான இன்றைய பயிற்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 108(99) மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி 113(78) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். வங்கதேசம் அணி வெற்றி பெற 360 ரன்கள் தேவை.
டெல்லி/இங்கிலாந்து: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.
உலக கோப்பையில் பங்கேற்ப்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 பயிற்ச்சி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சி ஆட்டம் மே 24 முதல் மே 28 வரை நடைபெறுகிறது.
உலக கோப்பையில் பங்கேற்க்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்று நடக்கவிருக்கும் பயிற்ச்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்க்கொள்கிறது. இந்த பயிற்ச்சி ஆட்டம் கார்டிஃப் நகரில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இன்றைய பயிற்ச்சி ஆட்டம்:
9_வது பயிற்சி ஆட்டம்: இந்தியா vs வங்கதேசம்
10_வது பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்