இந்தியா - இங்கிலாந்து அணிகள்  மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்திருக்கிறது. அந்த அணியின் துணைக் கேப்டன் ஒல்லி போப் தனி ஒரு பிளேயராக கடைசி வரை போராடி அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து அணியில் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவர் மட்டும் 196 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் குவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இங்கிலாந்து அணியால் ஒரு போட்டியை கூட ஜெயிக்க முடியாது - காரணத்தை சொல்லும் கங்குலி!


முதல் இன்னிங்ஸை பொறுதவரை இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுக்க, இந்திய அணி 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதற்கு அடுத்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தனி ஒரு வீரராக நின்று 196 ரன்கள் எடுத்துக் கடைசி விக்கட்டாக வெளியேறிய போப், இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவிப்பதற்கு காரணமாக இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு தற்பொழுது 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பும்ரா நான்கு, அஸ்வின் மூன்று ஜடேஜா இரண்டு அக்சர் ஒன்று என விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.




இங்கிலாந்து அணி நேற்று ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து, 126 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. இன்று மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 420 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் 230 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்பொழுது இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று இங்கிலாந்து அணியின் நான்கு விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். காலையில் ரேகான் அஹமத் விக்கட்டை முதலில் கைப்பற்றி பும்ரா ஆரம்பித்தார். மேலும் அவரே போப் விக்கெட்டை கடைசியாக கைப்பற்றி ஆட்டத்தையும் முடித்து வைத்தார்.



இந்திய மைதானங்களில் மூன்றாவது இன்னிங்ஸில் வெளிநாட்டு வீரர் ஒருவர் 196 ரன்கள் குவிப்பது என்பதெல்லாம் கடினம். இருப்பினும் புதிய சாதனை ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஒல்லி போப். இப்போது முதல் டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்குமே வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 


மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ