இந்தியா 455 ரன்கள் குவித்தது; இங்கிலாந்து தடுமாற்றம் 103/5
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய
கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஆடிய விராத் கோலி மற்றும் புஜாரா தங்கள் சதத்தை நிறைவு செய்தனர். 204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஹானே 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
பின்னர் விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடி வருகிறார். கேப்டன் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 167 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.
8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். அரைசதம் விளாசிய அஸ்வின் 58(95). இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 455 ரன்களை குவித்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 53(98) ரன்களை குவித்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழத்தினர். இந்தியாவை விட இங்கிலாந்து அணி 352 ரன்கள் பின்தங்கி உள்ளது.