இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இந்திய அணயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடும். அதனால், இப்போட்டியை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இளம் படை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேநேரத்தில் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். இந்திய அணி வெற்றி பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கு துருப்புச் சீட்டாக இருந்தவர் பும்ரா. காயம் ஏதும் இல்லையென்றாலும் பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுத்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணியில் ஏற்கனவே கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லை. 


மேலும் படிக்க | IPL 2024: யார் காரணம்? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமி.. ரசிகர்கள் சோகம்


அவர்கள் இல்லாமலேயே வெற்றிகரமாக இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது பும்ராவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதால், நான்காவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு சவால் காத்திருக்கிறது. பும்ரா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படுகிறது. 


இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: பிட்ச் ரிப்போர்ட்


ஹைதராபாத் மற்றும் ராஜ்கோட்டின் பிளாட் ஆடுகளங்களாக இருந்தன. ஆனால் ராஞ்சி மைதானம் அப்படி இருக்காது. உண்மையிலேயே பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த ஆடுகளம் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் இப்படியொரு ஆடுகளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இப்போதைய சூழலில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான மைதானமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பந்தில் அதிக சுழற்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: வானிலை


இந்தியா, இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டி விளையாடும் ராஞ்சியில் பிப்ரவரி 23 முதல் 26 வரை வானிலை நன்றாகவே இருக்கும். தெளிவான வானம் இருக்கும் என்பதால் மழைக்கான வாய்ப்புகளே இல்லை. ஒருவேளை போட்டி 5வது நாள் வரை நடைபெற்றால், பிப்ரவரி 27 ஆம் தேதி மழையால் போட்டிக்கு சிறு தடை இருக்கலாம். ஏனென்றால் அந்நாளில் மழைக்கான வாய்ப்பு 60 விழுக்காடு என கணிக்கப்பட்டுள்ளது. 


இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: நேரடி ஒளிபரப்பு


இந்தியா மற்றும் இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு காலை 9:30 மணிக்கு ஜியோசினிமா மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். இதுதவிர, பார்வையாளர்கள் Sports18 மற்றும் Colors Cineplex சேனல்களில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம்.


இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட்: பிளேயிங் லெவன்


இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ் (WK), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஷோயப் பஷீர்


இந்தியா உத்தேச பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சர்பராஸ் கான், ரஜத் படிதார், துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்


மேலும் படிக்க | நீண்ட நாள் காத்திருப்பு! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது.. ஆரம்பமே நாம தான்.. CSK vs RCB


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ