கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டாம் லாதம் மற்றும் வில் யங் ஆகியோர் நங்கூரம் நிலைத்து நின்று ஆடினர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்தியாவும் திணறியது. வேகப்பந்து வீச்சு கூட்டணியான இஷாந்த் ஷர்மா மற்றும் யுமேஷ் யாதவ் கூட்டணியை டாம் லாதமும், வில் யங்கும் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்த நிலையில், கூட்டணி பிரிந்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த வில் யங், 89 ரன்களில் அஸ்வின் (Ravichandran Ashwin) பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

214 பந்துகளை எதிர்கொண்ட அவர், 15 பவுண்டரிகளையும் விளாசினார். மறு முனையில் இருக்கும் டாம் லாதம் 85 ரன்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். வில் யங் அவுட்டான பிறகு களம் புகுந்த கேப்டன் வில்லியம்சன் (Williamson) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உணவு இடைவேளைக்கு முன்பாக இன்னொரு விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்த இந்திய அணியினர், அதற்கேற்ப அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். அதற்கு பலனும் கிடைத்தது.


ALSO READ | இந்திய அணிக்கு பின்னடைவு: நியூசிலாந்து தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்


உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீச வந்தார். அந்தப் ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன், எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்தது. இந்த விக்கெட்டுடன் 3வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. வில் யங் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 2021 ஆம் ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


நியூசிலாந்து அணி தற்போது வரை 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.


ALSO READ | இந்திய அணிக்கு இனி அஷ்வின் தேவையில்லை- கிறிஸ் ட்ரெம்லெட் சர்ச்சை பதிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR