இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!
India VS Pakistan: வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India VS Pakistan World Cup Match: இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தான் கிரிக்கெட் ரசிகர்கள் தவமாய் தவமிருக்கின்றனர்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான லீக் போட்டி ரசிகர்களுக்கு கடைசி நொடி வரை விறுவிறுப்பை அளித்தது. எனவே, இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியை நேரில் காண பல்லாயிரக்கணக்கானோர் திட்டமிட்டிருந்தனர்.
சமீபத்தில், உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தங்கள் முதல் லீக் போட்டியில் ஒருவருக்கு ஒருவர் குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் அக். 15ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அகமதாபாத் மைதானத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரலாம் என்பதால், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அங்குள்ள ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்து, பயண ஏற்பாட்டையும் மேற்கொண்டனர்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியின் தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நவராத்திரி பண்டிகையின் முதல் நாளை என்பதாலும், குறிப்பாக குஜராத்தில் இரவு முழுவதும் கர்பா நடனத்துடன், கொண்டாட்டம் இருக்கும்.
மேலும் படிக்க | ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித் இல்லையா? வெளியான பகீர் தகவல்!
எனவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆட்டத்தை வேறு தேதிக்கு மாற்ற கூறி பிசிசிஐக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "எங்களிடம் உள்ள ஆப்ஷன்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். இந்தியா - பாகிஸ்தான் போன்று அதிக எதிர்பார்ப்பு இருக்கும் போட்டிக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பயணம் செய்து அகமதாபாத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவை நவராத்திரி காரணமாக அதிக கூட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று பாதுகாப்பு முகமைகளால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஒரு பிசிசிஐ வட்டாரம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
போட்டி வேறு தேதியில் மீண்டும் திட்டமிடப்பட்டால், அது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். பல ரசிகர்கள் ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஒட்டிய தேதிகளில் பயணத் திட்டங்களை இறுதி செய்துள்ளனர். மேலும் உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகள், இரவு ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் படுக்கைகள் கிடைப்பது குறித்து அகமதாபாத் மருத்துவமனைகளில் கூட வெளிநாடு வாழ் இந்தியர்களும் கூட விசாரித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால், மறு திட்டமிடல் நடந்தால், ஹோட்டல் முன்பதிவு பெருமளவில் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. சுவாரஸ்யமாக, போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் (இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் லீக் போட்டி அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது), டிக்கெட் விற்பனை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, இது ரசிகர்களிடம் விரக்தியை அதிகரிக்கிறது. ஒருவேளை, லீக் சுற்றின் பெரிய ஆட்டமாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீண்டும் திட்டமிடப்பட்டால், சமூக ஊடக தளங்களில் ரசிகர்களின் சீற்றத்தை சந்திக்க பிசிசிஐ தயாராக நேரிடும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14-ம் தேதி மாற்றியமைக்கப்படும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அக்டோபர் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டது. நவராத்திரி தொடங்கும் நாள் அன்று இப்போட்டி திட்டமிடப்பட்டதால், பாதுகாப்பு அமைப்புகள் பிசிசிஐக்கு இந்த ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நாளை (ஜூலை 27) நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து போட்டி நடத்தும் இடங்களின் உறுப்பினர்களையும் ஒன்றுகூடுமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் வர உள்ள உலகக்கோப்பை தொடரில் நான்கு குழு ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதில் நவம்பர் 19 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியும் அடங்கும்.
மேலும் படிக்க | ICC ODI World Cup 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி வெளியானது முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ