16:07 03-10-2019
7 விக்கெட் இழப்பிருக்கு 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் டிக்ளர் அறிவித்தார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிக்ஸ் ஆடி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



14:22 03-10-2019
371 பந்தில் 215 ரன்கள் எடுத்து மாயங்க் அகர்வால் அவுட் ஆனார். இதனையடுத்து தற்போது ஜடேஜா மற்றும் ஹனுமா விகாரி ஆடி வருகின்றனர். தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்துள்ளது.



14:21 03-10-2019
இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய இளம் வீரர் மாயங்க் அகர்வால் தனது முதல் சதம் மற்றும் முதல் இரட்டை சதத்தை அடித்துள்ளார்.



13:19 03-10-2019
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்திய கேப்டன் விராட் கோலி 20(40) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தென்னாப்பிரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி அவரின் விக்கெட்டை வீழ்த்தினார். மூன்று விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்துள்ளது.



விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa) இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் மயங்க இருவரும் களம் இறங்கினார்கள். நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்தனர். ரோகித் 176 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் 157 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். 


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை விளையாடியது. முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டி-20 தொடர் சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.


நேற்று முதல் நாளில் இந்தியா 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததாலும், மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரோகித் 115 ரன்னுடனும், மயங்க 84 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 


இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 176(244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து சேதேஷ்வர் புஜாரா வந்தார். ஆனால் அவர் வெறும் 6(17) ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். தற்போது இந்திய கேப்டன் விராட் மற்றும் மயங்க ஆடி வருகின்றனர். 


சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார் மாயங்க் அகர்வால். மேலும் அவர் 150* ரன்களையும் கடந்து தொடர்ந்து ஆடி வருகின்றார். 101 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்துள்ளது.